10.9.2017. அன்று கனடா நாட்டில் வாழும் பாலாஜி என்ற பக்தர் ஸ்ரீகுருஜி ஆஸ்ரமத்திற்கு கோதானம் வழங்கிய காட்சி
கோ தானம் கோடி புண்ணியம்...
பசு தானம் பாவ விமோசனம்...
நமக்கு வரும் கஷ்டங்கள் முக்கால்வாசி முன்ஜென்ம வினையில் இருந்து தான் வருகிறது அதனையும் தீர்க்க வேண்டும் அதே போல் இந்த ஜென்மத்திலும் அறிந்து மற்றும் அறியாத செய்த பாவத்தில் இருந்து விடுவித்து நாம் நல்ல நிலையை அடையவேண்டும்.
அதற்கு என்ன வழி ?
தானம் அளிப்பது தான் சிறந்த வழி. தானங்களில் பல வகை தானங்கள் இருக்கின்றன இப்படி பலவகை தானங்கள் இருந்தாலும் கோ தானத்திற்க்கு ஈடு இணையாக வேறு எந்த தானமும் இருக்கமுடியாது.
கோ தானம் செய்யும் போது நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கிறது. சோதிடத்தில் ஏற்பட்ட எப்பேர்பட்ட தோஷமும் இதனால் கரையும். நாம் அறியாமல் செய்த பாவங்களும் விலகுகிறது.
கோ தானம் என்பது ஒரு குறிப்பிட்ட காரியம் வெற்றிகரமாக முடிய சங்கல்பம் செய்து செய்யலாம். சுபகாரியங்கள் வெற்றிகரமாக நடக்கவும், தனது வம்சம் சிறப்புற விளங்கவும் கோ தானம்செய்யலாம்.
ஒருவருடைய பிறந்த தேதி அல்லது வருடப்பிறப்பிலும், புண்ணிய காலங்களிலும் கோ தானம் செய்வது மிக விசேஷமானதாகும்.
பசுதானம் செய்து தங்களின் பாவங்களைத் தொலைத்து புண்ணியம் ஈட்டிட விரும்புபவர்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையிலும் நமது ஆசிரமத்தில் பசுதானம் செய்து வருகிறார்கள்.
தங்களின் பாவங்கள் நீங்கி புண்ணியம் சேர்ந்திட பசுதானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள் ஆசிரம அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
செல்: 8110088866